திவ்ய தேசங்களைப் பற்றிய வரலாற்றோடு துவங்குகிறது நுால். அந்தாதிப் பாடல்களாக அமைந்துள்ளன. சிதம்பரம் அருகில் காட்டுமன்னார்குடி என்ற திவ்ய தேசம் பற்றி விளக்குகிறது. ஸ்ரீவீரநாராயணப் பெருமாளை வழிபட்டால், 108 திவ்ய தேசங்களையும் வழிபட்ட பலன் உண்டு. திருமாலுக்கும், பிராட்டிக்கும் திருமணம் நடந்த போது வீராணம் ஏரியைச் சீதனமாகத் தந்துள்ளனர் என்ற தகவலைத் தருகிறது. நாலாயிரத் திவ்யபிரபந்தம் தோன்றிய வரலாற்றை நயம்பட விளக்குகிறது.
திவ்ய தேசங்கள் அமைந்துள்ள இடத்தை குறித்து உள்ளது. திருமால் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர், தாயார் பெயர், பெருமாள் விமானம், அங்கு உள்ள புண்ணிய நதி, தல விருட்சம், தல புராணத்தை நெறிப்படுத்தி கூறியுள்ளது. பின் இணைப்பாக, திருமால் மற்றும் தாயார் பெயர்கள், அமைவிடம் பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் இரா.நாராயணன்