ஆங்கிலேயரின் அராஜக போக்கை ஒழிக்க நடந்த போர்களில் காலத்தால் முந்தியதாக கருதப்படுவது, சிவகங்கையில் மருது சகோதரர்கள் நிகழ்த்தியதை பதிவு செய்யும் நுால். வாள் வீச்சிலும், வளரி வீச்சிலும் பயிற்சி பெற்று போர்த்திறம் உடையவர்கள் மருது வீரர்கள். இதை, ஆங்கிலேய ராணுவ அதிகாரி குறிப்பேட்டில் வருணித்துள்ளதை சான்றாக ஆவணப்படுத்தி உள்ளார்.
மருதுபாண்டியர் ஆட்சி முறையும், சமூக நீதி, தமிழ் வளர்ச்சிப் பணிகள், மத நல்லிணக்கம், விதவை திருமணம், பொருளாதார திட்டமிடல், உழவுத் தொழிலின் வளமை, இறை பணியின் மேன்மை, வேலு நாச்சியாரின் மதிநுட்பம், மருதுபாண்டியர் துாக்கு மேடை ஏறிய நிகழ்வு போன்றனவற்றை திருக்குறளோடு தொடர்பு படுத்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ள ஆவண நுால்.
– புலவர் சு.மதியழகன்