சவுக்கடி கடிதம் என்ற தலைப்பில் எழுதப்பட்டவற்றை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. அந்தந்த கால உண்மைகளை இன்று சரித்திரமாக சொல்லுகிறது. நீ விரும்பியது உனக்கு கிடைக்காவிட்டால், கிடைத்ததை முழு மனதாக விரும்பி விட வேண்டும். அது கட்டிய மனைவி முதல் பெற்ற பிள்ளை வரை. அப்படி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக எளிது.
சகோதரர்களிடம் ஒற்றுமை இல்லை; குரோதம் தான் உள்ளது. லாப, நஷ்டம் பார்க்க இது தொழில் இல்லை குடும்பம் என்பது போன்ற கருத்துரைகள் ஏற்கத்தக்கதாகவே உள்ளன. இயக்குனர் கே.பாலசந்தர் பற்றிய குறிப்புடன் வாழ்க்கைப் பாடத்தை சொல்கிறது.
அவர் நம்பிய ஒருவர் கவிதாலயா நிறுவனத்தையே கடனில் மூழ்கடித்து விட்டு பணத்தைச் சுருட்டி ஓடிவிட்ட காலத்தில், எதிர்பாராத விதத்தில் நடிகர் ரஜினிகாந்த் காட்டிய விசுவாசத்தை எடுத்து எழுதுகிறார். இது மாதிரி நல்ல சிந்தனைகளை விதைத்து உள்ளார். படித்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக்கள் உள்ள கடிதங்கள்.
– சீத்தலைச் சாத்தன்