பெண்ணின் மகத்துவம், மாண்புகளை விவரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்கள் இந்நாட்டின் கண்கள், பெண்கள் இல்லாத உலகத்தை நினைத்து பார்க்க முடியாது என்பதை வரிகள் உண்மையாக்குகின்றன.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என, பெண்களை வீட்டில் முடங்க வைத்ததை சாடுகிறது. ‘வரதட்சணை வழக்கம் மாறலையே, மாமியார் – மருமகள் பிரச்னையும் தீரலையே’ என நடைமுறையை உரக்கச் சொல்கிறது.
பெண், மாணவியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என, ஆண்டுகள் உருண்டோடும் போது, அந்தந்த கால கட்டத்தில் பெண்களின் இயல்பான வாழ்வியலை விவரிக்கிறது. மொத்தம், 142 தலைப்புகள் கொண்ட கவிதைகளும், பெண்களின் மன உறுதியை நிலைநாட்டுகின்றன.
– ராகவ்