ஆசிரியர்-டாக்டர்.இரத்தின சக்திவேல்,டாக்டர் சுபா,டாக்டர் கௌரி.வெளியீடு:காளீஸ்வரி பதிப்பகம்,2,வடக்கு உஸ்மான் சாலை,முதல் மாடி,(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தி.நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:88.அதிக உப்பு,அதிக எண்ணெய்,கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி,கூடுதல் உடல் எடை,இதய இரத்தக்குழாய் அடைப்பு,மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன.மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவால் நீரிழிவுப் பிணிகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன.எனவே,பலரும் பயன்பெறும் வகையில் எண்ணெய் இல்லாத,சீனி இல்லாத,சோடியம் உப்பு இல்லாத உணவுத் தயாரிப்புகளை அறுசுவை குன்றாமல் அருமையான நளச்சுவை கிடைக்கும் உத்திகளை அன்பர் இரத்தின சக்திவேலும் கூட்டணி டாக்டர்கள் சுபா மற்றும் கௌரி அவர்களும் இந்நூலில் தெள்ளத் தெளிவாகத் தருகின்றனர்.தண்ணீர் பூரி,முட்டை இல்லா ஆம்லெட் போன்ற யாரும் அறிந்திடாத புதுவகை உணவுச் செய்முறை அடங்கிய சமையல் நூலை உருவாக்கி உள்ளனர்.