கவிஞன், கவிதை, காதல் இதை கருவாகக் கொண்ட கவிதை தொகுப்பு. கவிஞர்கள், அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு உருவாகின்றனர் என்கிறது. கவிஞர்களை, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என சங்க காலத்தில் வகைப்படுத்துவதாக கூறுகிறது. எளிய கவிஞனின் கவிதையில், சமூக சாயல் கலந்திருப்பதை சொல்கிறது.
வார்த்தை சலங்கைகளை கட்டிக் கொண்டு, வரிகளின் மேல் குலுங்கி நடப்பதே கவிதை என்கிறது. கவிதை, கற்பனைகளால் ஒப்பனை செய்து கொள்ள உதவும் என்கிறது. கவித்துவம் உள்ள வரிகளெல்லாம் கவிதையாகிறது.
மனசுகள் பேசிக்கொள்ளும் மவுன மொழி, உணர்வுகளின் சுகமான தேடல் காதல் என்கிறது. கண்களே, காதல் தேசத்தின் கிழக்கு திசை என வழிகாட்டுகிறது. கவிதை எழுத முயற்சிப்போர் வாசிக்கலாம்.
– ராகவ்