பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை கவிதையாக படைத்துள்ளார் நுாலாசிரியர். மொத்தம், 43 தலைப்புகள் கொண்ட தொகுப்பு நுால். ‘நினைவுகள், காலங்களை கடந்து நெஞ்சங்களை ஈரமாக்கும் நேச நீரூற்றுகள்’ என்கிறது.
‘கல்வியை சுமந்து வரும் காகித கப்பல்கள்’ என புத்தகங்களில் பயணிக்க வைக்கிறது. பாரதி, வைரமுத்துவின் குரலை ஒலிக்கச் செய்கிறது. ஜாதிக்கு சங்கம் இருப்பதை சாடுகிறது. இன்றைய சட்டம், நீதியின் நியாயத்தை பேசுகிறது. புத்தாண்டை கொண்டாட அழைக்கிறது. நினைவுகளை அசை போட வைக்கும் கவிதை.