கொரோனா வைரஸ் பரவாது என ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு கொடுத்த அறிக்கையால் உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறது.
உயிரி ஆயுதமாக கொரோனா வைரசை தயாரித்தது சீனா தான் என பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன. தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனியில் நஷ்ட ஈடு கேட்டு எழுந்த குரல்கள், வூஹானில் லெவல் நான்கு ஆய்வகத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது என, சீனாவின் கிரைம் பட்டியலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது.
வூஹானில் துவங்கிய ஆய்வுகள், தர்க்கங்கள், கேள்விகள், பிற நாடுகளின் வாதங்கள் என புலன் விசாரணை செய்துள்ளார். சீனாவின் ஒட்டுமொத்த ஆதிக்க மனப்பான்மையும், உயிரி ஆயுதத்தின் மூலம் உலகை அசைத்து பார்க்க நினைத்த அதிகாரத் திமிரும் புலப்படும்.
–
எம்.எம்.ஜெ.,