மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை; அவை மக்கினாலும் மடிந்து போகாது. தருணம் பார்த்து மீண்டும் முளைக்கும்; வெற்றி பெறும் வரை ஓய்ந்தும் போகாது என்பன போன்ற, 100 தலைப்புகளில் வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நுால்.
தேடல் அறிவுக்கு நல்ல தீனி நாளிதழ்கள் என்று உரைக்கிறது. க.வெள்ளை வாரணார், மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர், நா.மு.வேங்கடசாமி நாட்டார், செ.வைத்தியலிங்கம், அடிகளாசிரியர், கோபால் அய்யர், புலவர் மதியழகன், பேரா.பாலசுந்தரம், ஆ.சிவலிங்கனார், சீனிநயனார் போன்ற தமிழ் அறிஞர்கள், வள்ளல்கள், துணைவேந்தர்களுடன், தமிழறிஞர் ஆறு.அழகப்பனுக்கு இருந்த உயர்ந்த தொடர்பை பதிவு செய்கிறது. வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணமாகத் திகழும் நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்