எளிய உண்மைகளை உரத்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 47 கவிதைகள் உள்ளன. பலவற்றில் நகைச்சுவை மிளிர்கிறது. கவிதை தலைப்புகள் கவித்துவத்தை தாங்கியுள்ளன. மிக சாதாரணமாகவும் அமைந்து உள்ளன.
தொகுப்பில் உள்ள, ‘அடிபோடி...’ என்ற தலைப்பிலான கவிதை, தாடிக்கும், காதலுக்கும் உள்ள உறவை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. அது போல், ‘இனித்திரு...’ என்ற கவிதையும் தனித்துவத்துடன் உள்ளது. மனைவி மீதான அன்பையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. இதுபோல், சின்ன விஷயங்களில் உள்ள இன்றியாமையை வெளிப்படுத்துகிறது. இனிமையை தரும் தொகுப்பு நுால்.
–
ஒளி