மண்ணில் போடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு மற்றும் விவசாயத்தில் துவங்கி வடலுார், தங்கம், மன அழுத்தம், தொலைக்காட்சி, பெண் கொடுமை, ஆண் பெண் சமம் என 32 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பெண் நாட்டின் கண் எனப் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நல்வாழ்விற்குத் தேவையான கருத்துகளையும், பசிப்பிணி, தன்னம்பிக்கை, சுயதிறன், மனிதநேயம், அளவோடு பெற்று வளமோடு வாழலாம் போன்ற கருத்துகளையும் சொல்கிறது. தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பது, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை என வளமையான கருத்துகளைக் கொண்டுள்ளது. சிந்தித்துப் போற்றத்தக்க நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்