கருவுற்ற மகளிருக்கு ஏற்படும் மசக்கை என்ற உபாதை பற்றி தனித்துவமான தகவல்களைக் கொண்டுள்ள நுால். மருத்துவ ரீதியாக தீர்வு சொல்லும் வகையில் அமைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மசக்கை என்ற உபாதையை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலானது. உணவும், பசியும் என்பதில் துவங்கி, மசக்கையும் மனநலமும், மசக்கைக்கு உடல் பக்குவமாதல், மசக்கையை எதிர்கொள்ளும் மந்திர சாவி என பொருத்தமான தலைப்புகளில் தகவல்களைக் கொண்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடல் இயக்கத்தை தெளிவாகக் காட்டி புரிய வைக்கிறது. திருமண வாழ்வில் நுழைபவர்கள் புரிந்து செயல்பட உதவும் அறிவு களஞ்சியமாக விளங்கும் நுால்.
– மதி