மொழி, நாட்டுப்பற்று, பெண்மையை போற்றுதல், தன்னம்பிக்கை வளர்த்தல், குழந்தை வளர்ப்பு, ஆசிரியர் கடமைகளை கவிதையால் வர்ணித்துள்ள நுால். மொத்தம், 110 தலைப்புகள் கொண்டுள்ளது. தன்னம்பிக்கை இருந்தால், எந்த செயலையும் சாதிக்க முடியும் என்கிறது. கடல் அலையின் அழகையும், ஆழிப்பேரலையின் ஆபத்தையும் உணர்த்துகிறது.
மரங்கள் வளர்த்தால் வளமாக வாழலாம் என்கிறது. மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவ வேண்டும் என சொல்கிறது. எந்த செயலிலும் சமுதாய கண்ணோட்டம் தேவை என்கிறது. குழந்தைகளிடம் புன்சிரிப்புடன் பொறுப்புகளை உரையாட வேண்டும் என உணர்த்துகிறது. சமூக பார்வையுடன் படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு.
–
சிங்கர்