ஜோதிடக் கலையின் சூட்சுமத்தை எடுத்துக்காட்டும், 1,008 செய்திகளை உள்ளடக்கிய நுால். செவ்வாய் தோஷமும் விஞ்ஞானமும்; மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர், பாஞ்சாலி, துரியோதனன், கர்ணன், கண்ணன் ஆகியோர் ஒன்பது கிரகங்களின் குண சாராம்சங்களைப் பெற்றிருப்பது பற்றி பதிவாகியுள்ளது.
ரிஷப ராசியின் அதிசய குணம், ராகு தரும் திருமண தோஷம், புத்திர பாக்கிய பரிகாரம், ஆகாத நட்சத்திரங்கள், கிரகணங்களால் ஏற்படும் ஆபத்து, அரச மரம் சுற்றுவதன் அர்த்தம் போன்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன.
குளிகை காலத்தை அறிய எளிய வழி, ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், மார்கழி மாத வழிபாட்டின் ரகசியம், இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதன் ரகசியம், ஆடி, தை அமாவாசையின் சிறப்பு, அமாவாசை நோன்பின் சிறப்பு போன்ற தகவல்கள் அடங்கியுள்ளன. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உகந்த நுால்.
– புலவர் சு.மதியழகன்