தலைவலி குறித்த அடிப்படை தகவல்களுடன் சிறந்த வழிகாட்டியாக உதவும் நுால். மனிதர்களுக்கு ஏதோ ஒரு சூழலில் தலைவலி சாதாரணமாக ஏற்படும். காரணமே இல்லாமலும் தலைவலி வரும் என்கிறது.
வலியை விரட்ட, மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி போட்டு, தற்காலிக நிவாரணம் தேடும் அறியாமையை சொல்கிறது. தானாக சரியாகி விடும் என்போருக்கு பல கேள்விகள் கேட்கிறது. ‘பாரசிட்டமால்’ மாத்திரை போட்டால், எந்த தலைவலியும் பறந்தோடி விடும் என கூறுவதின் உண்மை தன்மையை அலசுகிறது.
உடனடி விடுதலைக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரையால், பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது. நிரந்தர நிவாரணம் சொல்லும் ஏமாற்று பேர்வழிகளையும் தோலுரிக்கிறது.
ஒற்றை தலைவலி, டென்ஷன் தலைவலி, நரம்பு மண்டல தலைவலி, கொத்து தலைவலி, காலை தலைவலி வரும் காரணத்தை விவரிக்கிறது. தலைவலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை எச்சரிக்கையுடன் விவரிக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்