காஞ்சி மஹா பெரியவர், ஸ்ரீலலிதாம்பிகாவைப் பற்றிக் கூறிய கருத்துகள் இடம் பெற்றுள்ள நுால். லலிதா சஹஸ்ரநாமத்தில் கூறிய நாமாக்களுக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு துவங்கி ஒன்பது தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், மஹா பெரியவாளின் அருளமுதங்கள், சஹஸ்ரநாமங்கள், சஹஸ்ர நாம தோத்திரம் போன்ற பொருள் குறித்து பேசுகிறது.
அம்பிகையின் 1,000 நாமங்களையும் விவரிக்கிறது. லலிதா சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்யும் போது, அம்பாளின் பெருமை மட்டுமல்லாது ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு உண்டாவதாக குறிப்பிடுகிறது.
காஞ்சிப் பெரியவர் சொன்ன வாசகத்தை அப்படியே பதிவிட்டு விளக்குகிறது. அன்னை பராசக்தியை வழிபட்டால், அவள் கிருபை பெற்று எல்லா வளமும் நலனும் பெறலாம். ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்