நாட்டின் அவலங்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்ன சின்ன வரிகளில் பல விஷயங்கள் பேசப்பட்டு உள்ளன. நேரடியாக சுட்டிக்காட்டும் தலைப்புகளை கொண்டுள்ளது. ஒரு கவிதைக்கு, ‘மடமையைக் கொளுத்து’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அது, ‘நெருப்பாய் இதயம் சுட்டதால் தானே இருப்பாய், புரட்சி வெடிப்பாய்’ என பேசுகிறது.
அதே கவிதை, ‘உடைப்பாய், தடையை சிறப்பாய் சிறகு விரிப்பாய் வானம் படைப்பாய்’ என்று நம்பிக்கை விதைக்கிறது. இது போல் சிறிய தலைப்புகளில், சந்தம் மிகுந்த நெருப்பு வரிகளை கொண்டுள்ளது. கவிதை எழுத விரும்புவோருக்கு உகந்த நுால்.
–
ஒளி