வால்மீகி ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை தெளிவாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள நுால். மிக விரிவாகச் சொல்லப்பட்டு உள்ளது. நிகழ்வுகளுக்கு ஏற்ப படங்கள அங்கங்கே தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன. அனுமன் கடல் தாண்டிய படலம் மிகவும் துல்லியமாக வர்ணிக்கப்படுகிறது. லங்காதேவி அனுமனுக்கு கொடுத்த அனுமதி மிகவும் நல்ல விதமாக உள்ளது.
சுந்தர காண்டத்தை படித்தால் தம்பதியருக்கு ஒற்றுமை, குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆங்கிலத்திலேயே சுந்தர காண்டம் வந்துவிட்டதால், உலகம் முழுதும் உள்ளவர்கள் படித்து பெருமையை உணர முடியும். ஆங்கிலத்தில் வர்ணனை வடிவில் உள்ளது. போற்றிப் புகழ வேண்டிய புத்தகம்.
–
சீத்தலைச் சாத்தன்