இயற்கை, அன்பு, நம்பிக்கை, ஆதரவு போன்ற மனித இயல்புகளை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 33 தலைப்புகளில் கவிநயத்துடன் உள்ளது. அரசில்வாதிகள், அரசு இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவர் என்பதை, ‘அரசு இயல்பு’ கவிதை விவரிக்கிறது.
வீடுகளில் சேமிப்பின் அவசியத்தை, ‘உண்டியல் தினம் ஒன்று வேண்டும்’ என்ற கவிதை உணர்த்துகிறது. கொரோனா கோரப் பிடியை, ‘எச்சரிக்கை’ கவிதையும், இயற்கை சீற்றத்தில் சக மனிதர்களுக்கு உதவியதை ‘வணக்கத்துக்குரிய மனிதம்’ கவிதையும் பேச வைக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் சமூக பார்வையுடன் படைக்கப்பட்டு உள்ளது.
– ராயன்