பொது தலைப்புகளில் குறட்பாக்களை தொகுத்து சிந்தித்து கருத்துக்களையும், சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள நுால். திருக்குறளை புதிய வழியில் அணுகியுள்ளது. திருக்குறளில் பூக்கள், மரங்கள், தாவரங்கள், உணவு பண்டங்கள், பறவைகள், விலங்குகள், ஆண்மை பற்றி தொகுக்கப்பட்டு உள்ளது.
இலக்கணத்தில் அளபெடை, ஆய்தம் பயின்று வருபவை, உருவகம், உவமை பயின்று வருபவை, அரிய சொல்லாட்சி பற்றியும் கூறப்பட்டு உள்ளது. வள்ளுவர் சினந்து கூறும் இடங்கள், இரக்கப்படும் இடங்கள், தன்மான உணர்ச்சியைத் துாண்டும் இடங்கள் என 127 தலைப்புகளில் கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
ஒப்பிட்டுப் பார்க்கவும், உண்மை கண்டு தெரியவும், நுட்பங்களை உணரவும், நுண் பொருள் காணவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அழுக்காறாமை, புறங்கூறாமை போன்ற ஆமைகளையும், அன்புடைமை, அறிவுடைமை போன்ற உடைமைகளை தொகுத்தளிக்கவும், சட்டம், பொருளியல், மருத்துவம், அரசியல், அறிவியல், நிர்வாக மேலாண்மை பிரிவுகளிலும் உள்ளது. ஆய்வு நோக்கில் குறளை அணுகுவதற்கு தேடித் தவிக்கும் பளுவை குறைக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்