கண்ணியமான நகைச்சுவையை மின்னலென ஒளிரப் பேசும் பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா, மேலோட்டமாக பட்டிமன்ற துணுக்குத் தொகுப்பாக அமையாமல் கனம், கம்பீரமாக படைத்துள்ள புத்தகம்.
வேத காலம், வடமொழி, சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியம் என நகைச்சுவை பின்னணியை கூறிய பின், கம்ப ராமாயணத்தில் பிரவேசிக்கிறார். ‘காமெடி’ என்பதன் கிரேக்க மூலச் சொல்லான ‘கோமோடியா’ என்பதற்கு பொருளாக கேளிக்கை, மகிழ்ச்சியை வெளிக்காட்டுதல் என குறிப்பிடுகிறார். ‘ஹ்யூமர்’ என்பது நகைச்சுவையை உணரும், உருவாக்கும், ரசிக்கும் குணம்.
வரவேற்பதில் முகமன் கூறுவதில் முந்தி நிற்பது புன்முறுவல், மென்நகை மட்டுமே. உள்ளக் களிப்பு, உவப்பை எடுத்துச் சொல்வது புன்னகை. எதிரியை இளக, இணங்கச் செய்யும் ஆற்றல் புன்சிரிப்பிற்கு உண்டு என களைப்பு தராமல் எழுத்தோவியம் தீட்டியுள்ளார்.
–
பாரதி