வைகுண்டத்தில் இருந்து தன் அம்சங்களை ஆழ்வார்களாகப் பிறவி எடுக்கச்செய்து, தமிழ் மொழியில் உபதேசம் செய்யுமாறு அனுப்பியதாகக் குறிப்பிடுகிறது இந்த நுால். ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் ஆகிய இருவரையும் சேர்க்காது, 10 ஆழ்வார் என்பதற்கான விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் தனிப்பட்ட மனோபாவத்திற்கு ஏற்ப கடவுள் மீது பக்தியை சாந்தம், ஒரு வேலைக்காரன் அணுகுமுறை, ஒரு நண்பனின் அணுகுமுறை, தாயின் அணுகுமுறை, பெண் காதலனை நோக்கும் அணுகுமுறை ஆகிய வடிவங்களில் செலுத்துவதாக விளக்கப்பட்டு உள்ளது. அரிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
துளசி செடியைத் தாயாகக் கொண்டு பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாக அவதரித்து, சூடி கொடுத்த சுடர்க்கொடி, கோதை நாச்சியார் எனப் பெயர் பெற்ற நிகழ்வுகள், திருப்பாவையில் கூறப்படும் பாவை நோன்பு, ஒவ்வொரு பாசுரத்திற்குமான விளக்கங்கள், நாச்சியார் திருமொழி திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள திருமண வைபவ நிகழ்ச்சிகள், ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடிக்க திருவரங்கம் அழைத்துச் செல்லும் நிகழ்வுகள் பக்திச் சுவை சொட்ட எழுதப்பட்டுள்ளன.
–
புலவர் சு.மதியழகன்