ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக ஒலித்த இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கருவறையிலிருந்து எனத் துவங்குகிறது. தொடுகிற வரை குளிர் தரும், சுடுகிறபோது அனல் தரும் நிலா என வியந்துரைக்கிறது.
வரம் கொடுப்பதற்கல்ல, தலித்களுக்கு வாழ்க்கை கொடுப்பதற்காக பிறந்தவர் என்கிறது.
பட்டியல் இனத்தவர்களை, பொதுப் பெயரில் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்க ஆணையைப் பெற்றுத் தந்தவர். இவரது பணிகளைப் பாராட்டி அன்றைய பிரிட்டிஷ் அரசு, ‘ராவ் சாஹிப்’ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறது.
கவிதை வடிவிலான வாழ்க்கை வரலாற்று நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்