ஆசிரியர், தாய், தந்தை, மொழி, இறை, மனித நேயம், கோலங்கள், முகங்கள், வணக்கம், பெண்ணியம், மருத்துவர், செவிலியர், காதல், உழவு, உழைப்பு, நட்பு, பூப்பெய்துதல், வளைகாப்பு என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எதுகை, மோனையுடன் அழகுற எழுதப்பட்டுள்ளன.
எழுத்தாற்றலிலும், நடையிலும், கவிதை வாசிப்பிலும் தனித்துவமாக விளங்குகிறது. கவிதையின் மவுனத்திலும், நேர்மையை உச்சரிக்கும் சொற்களின் மூலமும் உணர்த்துகிறது. சங்கடங்கள் நிறைந்த சம்பவங்களை வாழ்க்கை அவ்வப்போது தந்து கொண்டிருந்தாலும், அதன் காயத்தை வடு தெரியாமல் கவிதையாக சுவடு பதிக்கிறது.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்