பழங்கால இந்தியா பற்றியும், மநு சாஸ்திரம் குறித்த கருத்துகளையும் அறிந்து கொள்ளும் வகையிலான நுால். மநு தர்ம சாஸ்திரம் குறித்த நான்கு புத்தகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ‘வர்ணம்’ என்பது, ‘ஜாதி’யாக மாறியதன் பின்னணி தகவல்களும் கூறப்பட்டுள்ளன. இதற்கு மநு தர்ம சாஸ்திரமும் காரணமாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று ஏற்பட்டுள்ள விளைவுகளும் கூறப்பட்டுள்ளன.
ஆன்மிகத்தோடு மநு தர்ம சாஸ்திரத்திற்கு இருந்த தொடர்பு, எழுதப்பட்ட சூழ்நிலையும் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்கள், வழக்குகள் தெளிவைத் தரும். மநு தர்ம சாஸ்திரம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அதில் பிராமணர்கள் குறித்த செய்திகள், சூத்திரர்களின் நிலை, சூத்திரர்களின் மதம் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. மநு தர்ம சாஸ்திரம், பெண்கள் விஷயத்தில் பல அம்சங்களை சட்டங்களாக எழுதியுள்ளது.
முடிவுரையில் சில தீர்வுகளும், கருத்துகளும் கூறி, மநு தர்ம சாஸ்திரம் பெயரில் இந்திய பாரம்பரியத்தை குறை கூறுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுரைக்கிறது. பண்டைய இந்தியா குறித்து அறிய உதவும் நுால்.
–
முகில் குமரன்