வீடு, கடை, தொழிற்சாலை எப்படி அமைக்கப்பட வேண்டும் என விளக்கிக் கூறும் நுால். பழைய நுால்களில் கூறப்பட்டுள்ள வாஸ்து கருத்துகளை எடுத்துக் காட்டி விளக்கம் தருகிறது. மூன்று நிலைகளில் விளக்கம் தருவதாக அமைந்துள்ளது.
பஞ்ச பூதங்களைப் போற்றுவோம் என்று துவங்கி, 30 கட்டுரைகளின் விளக்கம் கூறப்பட்டுள்ளது. ராசி வீடும் வாஸ்து வீடும், நாற்புற வாசல், வீடு கட்ட வாங்கும் மனை எப்படி இருக்க வேண்டும், திசைகள் பற்றிய கருத்து, வாசல் மற்றும் அறைகள், வாஸ்து எழுந்திருக்கும் காலம் போன்ற பொருண்மைகளில் தகவல்களை தருகின்றன.
வாஸ்துப்படி வீடு கட்டினால் செல்வம் பெருகும் என்கிறது. வாஸ்து தேவன் தோன்றியது பற்றி படத்துடன் விளக்குகிறது. வாஸ்து சாஸ்திரப்படி வீடு அமைத்து வாழ்ந்தால் ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி, வாழ்வாங்கு வாழலாம் என்ற நம்பிக்கையை தருகிறது. பின் இணைப்பாக கட்டட முகப்புத் தோற்றம், திசை மற்றும் வீட்டின் அமைப்பு வரைபடங்களாக தரப்பட்டுள்ளன.
–
பேராசிரியர் இரா.நாராயணன்