தமிழர்களின் ஆடற்கலையாகிய நடனத்தின் பெருமைகள், தொன்மை, தனித்தன்மைகள் குறித்தும் விளக்கும் நுால். தமிழர் ஆடற்கலை குறித்து பொய் பிரசாரம் செய்துள்ளோருக்கு பதிலடி தரும் வகையிலான கருத்துகளும், விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம், கூத்த நுால், பரத சேனாபதியம் உள்ளிட்ட நுால்களில் வரும் சான்றுகள் வாயிலாகவும், ஆடற்கலையின் தொன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மணிமேகலை கூறும் தகவல்கள், பிற்கால சோழர் காலம், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் காலம் துவங்கி இன்று வரை, நடனத்தின் சிறப்புகள் விரிவாக கூறப்பட்டுள்ளன; ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால்.
– முகில்குமரன்