திருப்புகழ் சந்தத்தில் 108 சொந்த சந்தப் பாடல்களும், கீர்த்தனைப் பாடல்களும் கொண்டுள்ள நுால். விநாயகர், சிவன், சக்தி, திருமால் தெய்வங்களின் அருளைப் பாடியுள்ளார். கொரோனா தொற்று முற்றாக நீங்குதல், அருளும், அன்பும், அறிவும் பெருக வேண்டுதல், வறுமை மாற வேண்டல், மனம் மாசின்றி துாய்மை பெற கேட்டல், என வேண்டுகோளை வேலவன் முன் வைத்துப் பாடி பிரார்த்தனை செய்துள்ளது, முருகன் அடியாருக்கு பயன்படும்.
‘முந்து வயதான அவ்வை நாடி கொஞ்சு தமிழோடு மோத கூடி, பிஞ்சு மகனாக வாகை சூடி விளையாடி’ என்று வரலாற்று நிகழ்வுகளைப் பாடியுள்ளார். ‘மனத்துயரை ஒடிக்கி விட நினைத்தவுடன் நமக்கு அருள சிவக்குமரன் எனக் கருணை உருவாகி’ என பாடியிருப்பது, திருப்புகழை நினைவூட்டுகிறது. முருகன் புகழ் பாடும் பாமாலை!
–
முனைவர் மா.கி.ரமணன்