மகாபாரதத்தோடு பின்னிப் பிணைந்த கதை. இயல்பான நடையில் சுவையாக உள்ளது. ஒரு நாவலைப் போல விரிகிறது. சகுனியின் சூழ்ச்சி மெல்ல மெல்ல வளர்வதை உரையாடலின் வலிமையால் அறிந்துகொள்ள முடிகிறது. துரியோதனன், கர்ணன், பீஷ்மர் ஆகியோருடன் சகுனி நிகழ்த்தும் உரையாடல் வலிமையானது. பீஷ்மரைப் பழிவாங்கத் துடிக்கும் சகுனியின் திட்டம், பாண்டவரை சூதில் வென்றாலும் அடுத்தடுத்து நிகழும் சூழ்ச்சிகள் தோல்வி அடைவது நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பகடையில் வெற்றி பெற்றவன் பகைக்களத்தில் படுதோல்வி காணும்போது சகுனி மீது இரக்கமே ஏற்படுகிறது.
காந்தாரிக்காகவே நாட்டையும், வீட்டையும், மனைவியையும், மகனையும் இழந்து, இறுதியில் இறந்த சகுனியின் அவல வாழ்க்கையை, ‘தங்கைக்காக வாழ்ந்த ஒரு பாசமலர்’ என்றே வருணிக்கப்பட்டுள்ளது. படிக்க விறுவிறுப்பாக உள்ள நுால்.
–
ராம.குருநாதன்