கிருஹப் பிரவேசம் செய்யும் முறைகள் குறித்து கூறப்பட்டுள்ள நுால். விநாயகர் பூஜை துவங்கி, அட்சதை ஆசீர்வாதம் வரை தரப்பட்டுள்ளன. முறைப்படி புரோகிதர் துணை இல்லாமல் கிருஹப் பிரவேசம் செய்ய விரும்புவோர் இதன் துணை கொண்டே செய்யலாம். புரோகிதரை வைத்து செய்யும் நடைமுறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், அக்னிமுகம், நவக்கிரஹ பூஜை, ப்ராணப்பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், பிராயச்சித்த ஹோமம், தீர்த்தப் புரோக்ஷணம், பஸ்ம ரக்ஷை, அட்சதை ஆசீர்வாதம் போன்ற தலைப்புகளில், புதுமனை புகுவிழாவின் சிறப்பான பூஜை முறைகளையும், மந்திரங்களையும் விளக்குகிறது.
முதலில் விநாயகர் வழிபாடு துவங்க வேண்டும். ஹோமம் செய்யும் இடம், துர் தேவதைகள் விலக மஞ்சள் மற்றும் கடுகை வாரி இறைக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கணவன், மனைவியுடன் தான் சேர்ந்து இதை செய்ய வேண்டும் என்ற தகவலையும் தருகிறது. கிருஹப் பிரவேசம் குறித்த தகவல்களை தரும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்