எட்டு புதுக்கவிதை நுால்களின் முழுத் தொகுப்பாக வெளிவந்து உள்ளது. பல வகை பாடுபொருள்களில் எழுதப்பட்ட புதுக்கவிதைகள் கலந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் வாழ்க்கை அனுபவம், வறுமை, மன வலிகள், ஏக்கங்கள், தன்னுணர்வு போன்ற கருத்துள்ள கவிதைகள்.
வறுமை குடும்பத்தின் அவல நிலை, அவமானங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் புரையோடியுள்ள கொடூரங்கள் எனப் பலவற்றையும் வேதனைக் கீற்றுகளோடு அரங்கேற்றியிருப்பது தெரிகிறது. சமூகச் சிந்தனைகளும், பொதுவுடைமைக் கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன. கவிஞரின் கூர்மையான சமூக மேம்பாட்டுக் கருத்தோட்டம் புலப்படுகிறது.
அங்கங்கு கிராமத்தின் இயற்கை எழிலைப் படம் பிடித்துக் காட்டும் அழகியல் சார்ந்தவையும் வருடுகின்றன. தன்னம்பிக்கை ஏற்படுத்திக்கொள்ளும் கவிதைகளும் உள்ளன.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு