காந்தி காலம் முதல் கொரோனா வரை நடந்த நடப்புகளை, கவிதையாக விவரிக்கும் நுால். இந்திய ஆளுமைகள், சிறுவர் நலன், தன்னம்பிக்கை, சுற்றுச்சூழல் போன்றவற்றை அடிப் படையாக கொண்டு படைத்துள்ளார். இளமைக்கால அனுபவங்களை கவிநயத்தோடு பகிர்கிறார்.
‘வெள்ளை ஆதிக்கம் தளர்ந்திடவே – எழுத்தில் வேள்வித் தீயை வளர்த்தவன்’ என பாரதி காலத்து சுதந்திர வேட்கையை பேசுகிறார். வேற்றுமையில் இந்தியர் என்ற ஒற்றுமை அடங்கி இருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார். குழந்தைகளின் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது.
திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பிரியாணி, மதுரை ஜிகர்தண்டா என தமிழக உணவுகளை கவிதை வரிகளில் படைத்துள்ளார்.
–
டி.எஸ்.ராயன்