எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள துப்பறியும் நாவல். விஞ்ஞான, தொழில்நுட்ப, வேதியியல் சாதனங்களின் பயன்பாட்டை மையப்படுத்தி புனையப்பட்டு உள்ளது.
ஓர் அரசியல்வாதி, சில போலீஸ் உயரதிகாரிகள் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. செல்வந்தர் வசிக்கும் பங்களாவுக்குள் நுழையும் நபர், அங்கிருந்த இருவரை மூர்ச்சையாக வைத்து சுட்டுக் கொல்கிறார். எதற்காக இந்தக் கொலைப் படலம் என்பது பற்றிய பரபரப்புகளுக்கு இடையே தகவல் வெளிவருகிறது. ஆள்வோரைப் பொறுத்தே காவல் துறை செயல்பாடு இருக்கும் என்பதை நாசுக்காகச் சொல்கிறது.
–
மேதகன்