திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமறைக்கு உரை விளக்கம் தரும் நுால். பக்திச் சுவை சொட்ட பாடியவற்றுக்கு உரை விளக்கம் தருகிறது. எளிய நடையில் அமைந்துள்ளது. முதல் பதிகத்தில், 136 தலங்களுக்கும் விளக்கம் தருகிறது. ஒவ்வொரு தலத்திலும் உள்ள இறைவன், இறைவி பெயரையும், மரத்தையும் குறிப்பிடுகிறது. பாடல்கள் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதையும் குறித்துள்ளது.
திருஞானசம்பந்தர் வரலாறும் வாழ்வும் முழுமையாக சொல்லப்பட்டுள்ளது. அற்புதங்கள் நிரல்படுத்தி தரப்பட்டுள்ளன. சீர்காழியின் 12 பெயர்களையும் காரண விளக்கத்தோடு தருகிறது. ஒவ்வொரு தல பெயரும், பதிக விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிகங்களின் ராகத்தை குறிப்பிட்டு சொல்கிறது. முதல் திருமுறையில் 1,469 பாடல்களுக்கும் புரியும் வண்ணம் உரை அமைந்துள்ளது.
பின் இணைப்பாக ஊர் பெயர், பதிகப் பாடல்களின் துவக்கம் அட்டவணைப்படுத்தி தரப்பட்டுள்ளன. பாடல் எண்களும் அகர வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் இல்லங்களில் இருக்க வேண்டிய நுால்.
–
புலவர் இரா.நாராயணன்