ஊடகங்களில் பணியாற்ற வருவோருக்கு, நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி வழிகாட்டும் நுால். நீதிமன்றங்கள் வெளியிடும் தீர்ப்புகளை சேகரித்து, எப்படி வெளியிடுவது என்ற நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர் செய்ய வேண்டியது, செய்யக்கூடாத தகவல்கள் உள்ளன. வழக்கின் வகை, நீதிமன்றங்களின் அமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் – வழக்கறிஞர் தொடர்பு மற்றும் அவதுாறு வழக்குகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
பொது நல, ‘ரிட்’ வழக்குகளை பற்றியும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர் நீதிமன்றங்கள் பற்றி கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிபதியிடம் பத்திரிகையாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் உள்ளன. செய்தியாளர்களுக்கு உதவும் நுால்.
–
முகில் குமரன்