மனித குணங்கள், நாட்டு நடப்புகளை சொல்லும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள, 115 தலைப்புகள் பல கோணங்களில் படம் பிடித்து காட்டுகின்றன. வில்லினை வளைத்த புருவமாக, காதலின் அழகியலை பேசுகிறது. கோடை கொண்டாட்டத்தை ஆனந்தமடைய சொல்கிறது. பறவைகளின் விழிகளை பார்க்கவும், குயிலை போல் இன்னிசை பாடவும் கற்று கொடுக்கிறது.
தமிழை போல் அழகு வேறெங்கும் உள்ளதா என காட்டச் சொல்கிறது. திருமணம் சந்தைப்பொருளா என சாடுகிறது. லஞ்சத்தை தோலுரிக்கிறது. மருத்துவமனையில் நோயின் விலையை பட்டியலிடுகிறது. தேர்வு பயத்தை போக்க வலிமை கொடுக்கிறது. உழைப்பவரிடம் மே தினத்தை உணர்த்த சொல்கிறது. தீர்ப்புகளின் திருத்தங்களை எடுத்துரைக்கிறது. வாழ்க்கையை ஓடம் என பயணிக்க ஏற்றி விடுகிறது. இப்படி ஒவ்வொரு தலைப்பும் பொருள் பொதிந்துள்ளது.
–
டி.எஸ்.ராயன்