நுாறு புதிர்கள் அடங்கியுள்ள நுால். ஒவ்வொரு புதிருக்குமான குறிப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. குறிப்புகளை கொண்டு விடையில் விடுபட்ட உயிரெழுத்தை கண்டறிதல் வேண்டும்.
மாணவர்களுக்கு சொற்களஞ்சியம் பெருக்கவும், புதிய சொற்களை தெரிந்து பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. உயிரெழுத்தை கண்டுபிடி என கொடுக்கப்பட்டிருந்தாலும், சில சொற்கள் உயிர்மெய் எழுத்தாகவும் இருப்பதை கண்டறிந்து நிரப்பும்படியாக உள்ளன. மாணவர்கள் புதுப்புது சொற்களை அறிந்து கொள்ள பயன்படுவதோடு, பொழுதுபோக்கவும் உதவும்.
– புலவர் சு.மதியழகன்