மனித வாழ்வியலை மனித நேயத்துடன் பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 50 தலைப்புகளின் தொகுப்பு. ‘கேட்டது தந்த பிறகும், சிலிண்டர் இங்கு வெடிக்குது; சிந்தை காயும் விந்தை உலகம்; நிந்தை மட்டுமே பெண்ணுக்கு சொந்தம்’ என, வரதட்சணையை சாடுகிறது.
சுயநலத்தை, எலியின் உணவு தேடலில் இருந்து விவரிக்கிறது. தன்னம்பிக்கையை, தள்ளுவண்டி வியாபாரி உழைப்பில் இருந்து பேசுகிறது. விசிலின் சத்தத்தை, நடத்துனர் உடல் மொழியில் இருந்து நகர்த்துகிறது. ஒவ்வொரு கவிதைக்கும், திருக்குறள், பைபிளில் இருந்து கூறிய விளக்க உரை, கவிதையின் மொழியை ஆழமாக பதிய வைக்கிறது.கவிதை எழுத துடிப்போருக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்