ஆன்மிகம், இயற்கை வளம், இந்தியா, தமிழகம், கொரோனா போன்றவற்றை மையப்படுத்தி, எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. மண் மீதான தீராத காதலை, உழவர் மனதில் இருந்து வெளிப்படுத்துகிறது.
மழையின் மகிமையை, நீர்த்துளியை போல் பொழிகிறது. பூமி, இயற்கை வளத்தை, சாமி போல் காக்க வேண்டும் என்கிறது. பறவைகளை, நேசிக்க கற்றுத் தருகிறது. இந்தியாவின் மகத்துவத்தை, சரித்திரமாய் பேச வைக்கிறது. ஆண்டான் அடிமை பேதமை இல்லாத ஒற்றுமை வேண்டும் என்கிறது. இசைபட வாழ்ந்த தமிழகத்தின் மகத்துவத்தை, எளிய மொழி நடையில் புரிய வைக்கிறது.
இயற்கை வளங்களை காதலிக்க சொல்லித் தருகிறது. கொரோனாவின் கொடுமையை துரத்த சத்தமிடுகிறது. நுாலாசிரியரின் தமிழ் மீதிருந்த அதீத ஆர்வம், ஒவ்வொரு கவிதைகளிலும் வெளிப்படுகிறது.
–
டி.எஸ்.ராயன்