மக்களுக்கும், அரசனுக்கும் உள்ள உறவை பேசும் கவிதை தொகுப்பு. அறம், இயற்கை வளம், கல்வி, ஆளுமை, மக்கள் நலனைப் பேசுகிறது. பழங்காலம் மட்டுமில்லாமல், இன்றைய ஆட்சிக்கும், வருங்கால ஆட்சிக்கும் பொருந்தும் வரிகளை, தேன் தமிழில் சுவைபட ஊட்டுகிறது. மூவேந்தர் ஆண்ட காலத்தையும், முத்தமிழ் வளர்த்த விதத்தையும் விவரிப்பது அரிது.
அச்சமில்லாத வாழ்க்கை, நெஞ்சை நிமிர வைக்கும் என்கிறது. வீடுகளிலும், அண்டை நாடுகள் உறவிலும், அமைதி இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அளவுக்கு அதிகமான செல்வம் இருந்தாலும், கல்வி தான் அர்த்தமுள்ள வாழ்வை கற்றுக் கொடுக்கும் என்கிறது. இப்படி, இயற்கை வளம், நாட்டு வளம், மக்கள், புலவர்களின் நிலையை பேசுகிறது.
ஒவ்வொரு கவிதை வரிகளும், மன்னர்கள் காலத்திற்கு அழைத்துச் செல்லும் உணர்வை கொடுக்கும். கவிதை எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்