எண்ணங்கள், கருத்துகளின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. அன்பும், அறிவும் தான், வாழ்வியலை அர்த்தம் கொண்டதாக்கும் என சொல்கிறது. எல்லா வளமும் பெற்ற நாட்டில், வறுமை ஏன் வாட்டுகிறது என கேள்வி எழுப்புகிறது. மழையின் வரவை, வரவேற்கும் விதத்தை சொல்கிறது. மாலுமி இல்லாத கப்பலை போன்றது என, நல்ல ஆசிரியர் இல்லாத பள்ளிகளை சுட்டிக் காட்டுகிறது.
துன்பம், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும் என உறுதிபட சொல்கிறது. குழந்தையின் சிரிப்பை வர்ணிக்கிறது. எதையும் ஏற்கும் மனமிருந்தால், மாளிகையிலும், மண் குடிசையிலும் மகிழ்ச்சி வாழ்க்கை நடத்த முடியும் என உணர வைக்கிறது.
பயம் வாழ்வில், நிம்மதி தொலைந்து விடும் என்கிறது. குற்றங்களையும், சட்டங்களையும் பேசி அவலங்களை சாடும் கவிதை, சமூக அக்கறையை காட்டுகிறது.கதை, கவிதை எழுத துடிப்போருக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்