குறு என்ற சொல்லுக்கு, ‘குறுகுகுறுகென விருத்தி’ என கந்த புராணமும், ‘உரைகுறுக நிமிர் கீர்த்தி’ என கம்ப ராமயணமும், ‘இடைப்படிற் குறுகு மிடனுமாருண்டே’ எனத் தொல்காப்பிய எழுத்தியலும், ‘இளங்கோவேந்த னிருப்பிடங் குறுகி’ என மணிமேகலையிலும், சிறுகுதல், மாத்திரை குறைதல் என அமைகிறது. அந்த வகையில் குறுநாவலாக அமைந்த நுால்.
மக்களின் சமூக வாழ்க்கை, வர்க்க வேறுபாடு, காதல் நிகழ்வுகள், உரையாடல் மொழி ஆகியவற்றை கொண்டுள்ளது. மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை வெளிப்படுத்துகிறது. சிறந்த பொழுதுபோக்கை உள்ளடக்கிய நாவல்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்