எதார்த்த வாழ்வில் பார்த்து ரசித்து கடந்து போகும் காட்சிகள் கவிதையாக படைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 80 கவிதைகள். எளிதாக வாசிக்க துாண்டும் வகையில், பெரும்பாலானவை ஏழு வரிக்கு மேல் நீளவில்லை.
‘அட்சய பாத்திரம் என்னவானது... அது இருந்தது உண்மையானால், இங்கே பிச்சைப் பாத்திரம் ஏன் வந்தது?’ என ஏழைகள் நிலையை உணர வைக்கிறது.சில, நகைச்சுவை உணர்வை துாண்டுகின்றன; சமூக நடப்புகளையும் பேசுகின்றன.
வரிகளும், அதற்கு பயன்படுத்திய யுக்தியும் வாசிப்பின் சுவாரசியத்தை அதிகரிக்கச் செய்கிறது. கவிதை எழுத துடிப்போருக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்