தடைகளை தகர்த்து, தன்னம்பிக்கையுடன் முன்னேற துாண்டும் கவிதை தொகுப்பு. கவிதை வரிகள், உறவுகளை வெறுக்காதே என்கிறது. மாற்றுத்திறனாளிகளை மதிக்க கற்றுக் கொடுக்கிறது. பாரதியின் கோபக் கனலை வீசுகிறது. கள்ளிப்பால் கோரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
தமிழகத்தின் பண்பாட்டை, ‘தமிழ் நாட்டின் பண்பாடு; தரணிக்கே சிறந்த கையேடு...’ என்கிறது. மரங்களின் படைப்பை, அழகாய் வளரச் செய்கிறது. நீதியை விலைக்கு வாங்குபவர்களை, ‘எங்கே போனது நீதி’ கவிதை சாடுகிறது.
‘கோவில் வாசலில் சில்லறைக்காக காத்திருக்கும் விழிகள்...’ கவிதை, ஏழையின் குரலுக்கு செவி சாய்க்கச் சொல்கிறது. தடையுடைத்து முன்னேற துாண்டும் வரிகள் ஏராளம்.
–
டி.எஸ்.ராயன்