இன்று அனைத்து வயதினரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோய் இருக்கிறது. இந்த நோயைப் பற்றிய தெளிவான அறிவை, ‘சாமானியனும் சர்க்கரை நோயும்’ என்ற இந்த புத்தகம் வாரி வழங்குகிறது.
இந்த நோய் குறித்த உயிர் காக்கும் எச்சரிக்கைகளை சாதாரண மருத்துவரின் அச்சுறுத்தும் பாணியில் சொல்லாமல், சக மனிதனாக ஆதரவான வார்த்தைகளில் விளக்கி இருக்கிறார் நுாலாசிரியர். சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் முக்கிய அறிவுரைகளை சாமானியனும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் சரளமான நடையில் பழமொழிகள், சொலவடைகள், நகைச்சுவை துணுக்குகள், சுவையான நிகழ்வுகள், திருவள்ளுவர், பாரதி என்று பலவற்றையும் கலந்து இந்த நுாலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்த புத்தகம் உண்மையிலேயே சாமானியனுக்கும் மிகுந்த பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
–
இளங்கோவன்