சாதி, மதம் கடந்த பற்றற்ற துறவி மூதறிஞர் ராஜாஜி என்பதை பறைசாற்றும் வகையில் பலவிதமான ஆதாரங்களை கொண்டு நிறுவும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். அவர் சாதிப் பற்றாளர் என வரலாறு திரித்து எழுதப்பட்டதை கோடிட்டு காட்டும் வகையில் பல சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன.
சாதி வேற்றுமைகளை ஒழிக்க ராஜாஜி ஆற்றிய அரும்பணிகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. ராஜாஜி 1900ம் ஆண்டில், தன் 23வது வயதில் சீர்திருத்தவாதி ஆனார். அப்போது பஞ்சாபில் ஆரிய சமாஜமும், வங்கத்தில் பிரம்ம சமாஜமும் சாதி பேதத்தைக் கண்டித்து பிரசாரம் செய்தன.
இந்த சூழலை பயன்படுத்தி, சாதி பேதங்களை களைய கலப்பு திருமணங்களையும், சமபந்தி போஜனங்களையும் ராஜாஜி நடத்தினார். சேலம் நகர சபை உயர்நிலைப் பள்ளி மாணவர் இல்லத்தில், பின்தங்கிய இன சிறுவர்களை சேர்த்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தும் பொருட்படுத்தவில்லை. ராஜாஜி சாதி பேதத்தை ஒழிக்க, பல அரும்பணிகளை செய்துள்ளார் என்பதை விளக்கும் நுால்.
–
முகில் குமரன்