வெண்பா எழுத்தில் படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. இதற்காக யாப்பதிகாரம் நுாலை படித்துள்ளேன் என்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கவிதைகளும், ஆழ்ந்த பொருள் கொண்டவை. கற்பனை வளத்துடன், சொற்கள் கசடு தெரியாமல் செதுக்கியுள்ளார். தமிழ் மீதுள்ள பற்றை, மிகையில்லாமல் புரிய வைக்கிறார்.
‘நுாறு வகை நுால் படி; நுட்பங்கள் ஆய்ந்திடு; கூறுவதில் தேர்ச்சி கொள்...’ என்ற கவிதை, ஒரு நுால் எழுத, 100 நுால் படித்து, அதன் நுட்பங்களை ஆராய வேண்டும் என்கிறது. பெண்ணுரிமை, வாழ்க்கை வசதியில் இல்லை... வாழ்க்கையின் நிறைவில் உள்ளதை சொல்லும் வரிகள், வாழ்வியல் அர்த்தத்தை உணர்த்துகின்றன. பெண்ணின் நடையை ஆபாசமில்லாமல் அழகாக வர்ணித்துள்ளார்.
ஒவ்வொரு வரிகளும் கூட்டு ஓசையை எழுப்புகின்றன. உள்ளத்தின் உணர்வுகளை, காலம் முழுவதும் வென்று நிற்க வைக்கிறது. கவிதை எழுதுபவர்களுக்கு துணைபுரியும் நுால்.
–
டி.எஸ்.ராயன்