நாட்டு நடப்புகளை விவரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 46 கவிதைகள் உள்ளன. காதலியிடம் நிரந்தரமாக வாழ்ந்து காட்டச் சொல்லும் காதலனின் வலியை விவரிக்கிறது.
பிரிவின் வேதனையை நோகாமல் சொல்கிறது. அழகை, இயற்கையுடன் பொருத்திப் பார்க்க வைக்கிறது. தீர்ப்புகள், ஏழை மனசாட்சியுடன் கிடைக்க வேண்டும் என்கிறது.
மின்விசிறியின் ஓட்டத்தை பின்தொடர்கிறது. பாதை தவறிய பாதங்களில் நடக்க வைக்கிறது. ஆசிரியர்களின் அறிவொளியை பேசுகிறது. வாழ்க்கையை மரத்துடன் ஒப்பிடுகிறது. உழைப்பை அர்த்தமுள்ளதாக்க சொல்கிறது. இப்படி ஒவ்வொரு கவிதையும் வாழ்வியல் கருத்துகளை பேசுகிறது.
–
டி.எஸ்.ராயன்