கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எனப் போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்து நிறைய படித்திருப்போம். அவை தகவல்களாக, செய்திகளாக, சுட்டுக்களாக, கட்டுரைகளாக இருந்திருக்கும். அவற்றை கவிதை வடிவில் வனைந்துள்ளார், அரசு பள்ளி அறிவியல் ஆசிரியரான சுந்தர.வெங்கடேசன்.
எடிசனின் பிறப்பு முதல் அவருக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றும் வேதனைகள், அறிவியல் ரீதியாக அவர் மேற்கொண்ட சோதனைகள், பள்ளியில் நடந்த நிராகரிப்பு, உடற்கோளாறு, ரயிலில் செய்தித்தாள் விற்று சம்பாதித்தது, காய்கறி வணிகம் போன்ற விபரங்கள் உள்ளன.
அறிவியல் ஆய்வு ஆர்வத்தில் வாத்து முட்டை அடைகாப்பு, அமில விபத்துகள், பணியை இலகுவாக்க மேற்கொண்ட அவரது கண்டுபிடிப்பு, அதனால் ஏற்பட்ட பணியிழப்பு என சகலத்தையும் மிகச் சுருக்கமாக தெரிவிக்கிறது. இளையோர் மனதில் பதியும் வகையில் அழகாக கூறும் நுால்.
–
மேதகன்