தமிழ் மொழி, பண்பாட்டு, வாழ்வியலை கூறும் நுால். பாரதியார், பாரதிதாசன் உட்பட 16 கவிஞர்களின் பாடல்களை அறிமுகம் செய்கிறது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தை எடுத்துரைக்கிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற மெய்ப்பாடுகள் பற்றி விவரிக்கிறது.
வடமொழி நுால்கள் காட்டும் ராசக் கோட்பாடும், இதோடு தொடர்புடையதையும் காட்டுகிறது. மறுமலர்ச்சி பாடல்களை, விடுதலை காலம் மற்றும் விடுதலைக்கு பிந்தைய காலத்தோடு பகுப்பாய்வு செய்யலாம் என்கிறது.
பெருமிதம் என்ற மெய்ப்பாட்டில், கல்வி குறித்த செய்திகள் இடம் பெற்று உள்ளன. பேய், பூதம் போன்ற கற்பனை படைப்புகளுக்கு இடம் தராமல் படைத்துள்ளதை எடுத்துரைக்கிறது. மறுமலர்ச்சி கவிஞர்களின் உணர்ச்சி நிலை, ஏற்படுத்திய தாக்கம் ஆய்வின் நோக்கமாக கொண்டுள்ளது. கவிதை, பாடல்கள் எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்